கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தொகுதிச் செயலாளர்கள் ஆனந்த், பிரகாஷ், மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மணி செந்தில், ஹீமாயுன்கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடும் சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரியும், சாட்டை துரைமுருகன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனே ரத்து செய்யக் கோரியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.