ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் பரிதாப சாவு

கும்பகோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத முதியவர் ரயில் மோதி இறந்தார்.

Update: 2021-06-28 13:18 GMT

கும்பகோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத முதியவர் ரயில் மோதி இறந்தார்.

சுந்தரபெருமாள் கோவில் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் அருகே தண்டவாளத்தில் முதியவர் இறந்து கிடப்பதாக கும்பகோணம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து திருவலஞ்சுழி வி.ஏ.ஓ. அருண்குமார் போலீசில் புகார் கொடுத்தார்.

சம்பவ இடம் வந்த இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ. சிவராமன் மற்றும் போலீசார் சென்று முதியவர் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சவ கிடங்கில் முதியவர் உடல் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 65 வயது மதிக்கத்தக்க அளவில், கறுப்பு நிற வேட்டி மட்டும் கட்டியிருந்தார். துண்டு, பனியன், சட்டை எதுவும் அணியவில்லை. இறந்தவர் யார்? என உடனே அடையாளம் தெரியாததால் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


Tags:    

Similar News