கும்பகோணத்தில் ஒரே பகுதியில் 33 பேருக்கு கொரோனா

கும்பகோணத்தில் ஒரே பகுதியில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-05-22 05:45 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6,45,144 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 38,057 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32,225 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 5,399 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 5,414 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 824 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் பகுதியில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது

Tags:    

Similar News