கும்பகோணம் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

கும்பகோணம் பாலக்கரை, காமராஜ் நகர் அருகிலுள்ள விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-03-03 14:30 GMT

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர்.

கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகிலுள்ள விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் உக்ரைன் நாட்டில் நடந்து வரும் போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டி சிறப்பு பிரார்த்தனையுடன் விஷேச பூஜைகள் நடைபெற்றது.

இதில் 11 அடி உயரம் உடைய ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேய மூர்த்திக்கு 10008 வாழை பழங்கள் கொண்டு செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானம் நிர்வாகிகள் ராமன் பட்டர், மோகன் பட்டர், பாலாஜி பட்டர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News