கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி கலந்துரையாடல் ஆய்வு கூட்டம்
கும்பகோணம் பரஸ்பர சகாயநிதியின் கலந்துரையாடல் ஆய்வு கூட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கும்பகோணம் பரஸ்பர சகாயநிதியின் கலந்துரையாடல் ஆய்வு கூட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் இயக்குநர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் மேலாண் இயக்குநரும் தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளருமான கல்யாணசுந்தரம் பேசுகையில், கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி நிறுவனம் நூற்றாண்டு கால நிறுவனம். நாணத்திற்கும் நம்பிக்கைக்கும் பெயர் பெற்றது. இதன் நிர்வாகத்தில் கடந்த காலத்தில் குறைபாடுகள் இருந்தாலும், குற்றச்சாட்டுகள் இருந்தாலும், நாம் அதை பெரிது படுத்தினால் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பாதிக்கும். எனவே ஒவ்வொரு செயல்பாட்டையும் கவனமாக கையாள வேண்டும்.
லாபத்தை பார்க்காமல் ஏராளமான நன்மைகள் ஒவ்வொரு காலங்களிலும் நாம் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளோம். இனி இது கூடிய விரையில் நல்லொரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். அந்த குழுவில் நல்லர்களோடு மட்டுமல்லாமல் வல்லவராக உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்,
அதனை தொடர்ந்து ஊழியர்களுக்கு விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும. நியாயமான பதவி உயர்வு வேண்டும், தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் நியமனம் செய்தல், வாராக்கடனை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பரஸ்பர சகாயநிதியின் ஊழியர்கள், பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் என ஏராளமோனார் கலந்து கொண்டனர்.