கும்பகோணம்: கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

கும்பகோணம் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2022-03-31 13:15 GMT

கும்பகோணம் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மூன்று போகம் நெல் சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் நெல் சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் கோடை நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தற்போது சம்பா நெல் சாகுபடி அறுவடை முடிந்துள்ள நிலையில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் மோட்டார் பம்பு வசதிகொண்ட விவசாயிகள் குறுகிய கால கோடை நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக மோட்டார் பம்பு மூலம் தண்ணீரை இறைத்து தங்களது சாகுபடி வயல்களை கோடை நெல் சாகுபடிக்கு தயார் செய்து, விதை தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 115 நாட்களுக்குள் அறுவடை செய்யும் வகையில் குறுகிய காலத்தில் உற்பத்தியாகும் நெல் ரகங்களை இந்த கோடை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர். கோடை நெல் சாகுபடிக்காக வயலை டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News