கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருத்தேர் திருப்பணி தொடக்கம்

மங்களாம்பிகா கைங்கர்ய சபா சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தேர் திருப்பணிகள் தொடங்கப்பட்டன

Update: 2021-08-26 14:18 GMT

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. மகாமக விழா சிறப்பு பெற்ற இந்த கோயிலுக்கு சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு தனித் தனியாக தேர் உள்ளது. மாசிமக விழாவின் போது இந்த தேர்கள் அனைத்தும் தேரோட்டமாக இருநாட்களுக்கு  வலம் வரும்.

இதில், சுவாமி தேர் சிதிலமடைந்ததையடுத்து, புதிய தேரை புனரமைக்க கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, மங்களாம்பிகா கைங்கர்ய சபா சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில், தேர் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி, தேரடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து பழைய தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சிட்டி யூனியன் வங்கியின் பவுண்டேஷன் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், திட்ட இயக்குநர் எஸ்.பாலசுப்ரமணியன், தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன், சரஸ்வதி பாடசாலை தாளாளர் தீபக் ரமேஷ், ஆதிகும்பேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், மங்களாம்பிகா கைங்கர்ய சபா தலைவர் தியாகராஜன், ஸ்தபதி ராதாகிருஷ்ணன், ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி வழிபாட்டு குழு நிர்வாகிகள் குருமணி, சிதம்பரநாதன், தலைமை கொத்தனார் பாலச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News