இந்தியாவிலேயே மூன்றாவது பிரம்ம ஷேத்திரமாக போற்றப்படும், கும்பகோணத்தில் அமைந்துள்ள வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில் மற்றும் அதனுடன் இணைந்த வரதராஜபெருமாள் திருக்கோயில் ஆகியவற்றின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கோயில் நகரான கும்பகோணத்தில் அனைத்து சுவாமிகளுக்கும் தனித்தனியே திருக்கோயில்கள் அமைந்து சிறப்பு வேறு எங்கும் காண முடியாது, அந்த வகையில், வட இந்தியாவில் பிரமனுக்கு என தனித்கோயில் உள்ளது. போன்று தமிழகத்தில் திருபட்டூருக்கு அடுத்து 3வதாக, பிரமனுக்குரிய தலமாக விளங்குவது கும்பகோணத்தில் அமைந்துள்ள வேதவல்லி தாயார் சமேத வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலாகும், பிரசித்தி பெற்ற பிரமன் கோயில் என போற்றப்படும் இத்திருக்கோயிலுக்கும் இதன் அருகேயுள்ள மற்றொரு வைணவத்தலமான பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் திருக்கோயில். ஆகியவற்றுக்கும் ஒருசேர ஒரே நேரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் அங்குரார்பனம், வாஸ்து சாந்தி திக்பந்தனம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று காலை 5ம் கால யாக சாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹதி அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்ற பின்பு, மங்கல வாத்தியங்கள் முழங்கள், கடங்கள் புறப்பாடு நடைபெற்று அதன் பிறகு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.