சுவாமிமலை மற்றும் தாராசுரத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

சுவாமிமலை மற்றும் தாராசுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது;

Update: 2022-06-02 18:30 GMT

தாராசுரம் வலையப்பேட்டை பைபாஸ் அம்மாபேட்டையில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் அரசு கொறடா கோவி. செழியன் தலைமையில்  மரியாதை செய்த திமுகவினர்

சுவாமிமலையில் பேரூர் திமுக சார்பில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியில்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சுவாமிமலையில் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு பேரூர் கழக செயலாளர் எஸ்எம்எஸ். பாலசுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி மன்றத் தலைவர் வைஜயந்தி சிவகுமார், திமுக நிர்வாகிகள் நெடுஞ்செழியன், வக்கீல் விஜயகுமார், இக்பால், சுப்பிரமணியன், டிஜிஎஸ். கோபால், மனோகரன், தேவஸ்ரீகண்ட ஸ்தபதி, கோபால், பேரூராட்சி கவுன்சிலர்கள் லட்சுமிபிரியா கோபால், குணசேகரன், ராதிகா, ஜெய்சங்கர் மற்றும் பாஸ்கர், குணசேகரன், ராமச்சந்திரன், ராஜா, நீலமேகம், சரவணன், ரவி, ஆட்டோ கணேசன், சம்பத், விஜயபாலன், பாலதண்டாயுதம் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

தாராசுரத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு தாராசுரம் வலையப்பேட்டை பைபாஸ் அம்மாபேட்டையில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு  தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், அரசு கொறடா கோவி. செழியன் தலைமையில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்பி சண்முகம் ஆகியோர் முன்னிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் குடந்தை மாநகராட்சி மண்டல குழு தலைவரும் தெற்கு ஒன்றிய செயலாளருமான அசோக்குமார், குடந்தை மாநகர துணை மேயர் தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News