கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றம் முன்பு கலைஞர் பிறந்தநாள் விழா
கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் நீதிமன்றம் முன்பு கலைஞர் பிறந்தநாள் விழா நடைப்பெற்றது.;
கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கலைஞர் பிறந்தநாள் விழா
கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் சக்கரபாணி, வழக்கறிஞர் சங்க செயலாளர் ராஜசேகர் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், மாதவன், கவிதா, அருள், ஆனந்த், சுரேஷ், பழனிவேல் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர் நீதிமன்ற வளாகத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா
திருவிடைமருதூர் நீதிமன்ற வளாகத்தில் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் குறிச்சி ராஜசேகர், ராமச்சந்திரன், மாதவன், மகாலிங்கம், சண்முகம், சுதாகர், தட்சணாமூர்த்தி, கரிகாலன், ராமச்சந்திரன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.