சூரியனார் கோயிலில் கார்த்திகை மாத தீர்த்தத் திருவிழா
சூரியனார் கோயிலில் கார்த்திகை மாத தீர்த்தத் திருவிழாவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சூரியபகவான் அருள்பாலித்தார்;
கும்பகோணம் அருகே உலகப் புகழ்பெற்ற சூரியனார் கோவிலில் கார்த்திகை மாத தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு சூரிய பகவான் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் நிகழ்ச்சி அரசு விதிமுறைப்படி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.