கும்பகோணம் பாணாதுறை ஜலசந்திர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் பாணாதுறை ஜலசந்திர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2022-01-20 13:24 GMT
கும்பகோணம் பாணாதுறை ஜலசந்திர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பகுதியில் மிகப்பழமையான ஜல சந்திர மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் முடிந்த நிலையில் காவிரியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் யாகசாலையில் வைக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் இரண்டு நாட்களாக 4 கால யாக பூஜைகள் நடத்தினர்.

யாகத்தில் போடுவதற்காக 60 வகையான மூலிகைகளை ஏராளமான பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்து கொடுத்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க யாக பூஜைகளை நடத்தினர். யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு கோபுரம், ராஜகோபுரம் மூலவர் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Tags:    

Similar News