முககவசம் அணிய வலியுறுத்தல்

கும்பகோணத்தில் முகக் கவசம் அணியாமல் தபால் வாக்கு செலுத்த வந்த அரசு அதிகாரிக்கு ரூ.200 அபராதம் விதிக்கும்படி அறிவுறுத்திய சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்.

Update: 2021-03-26 12:20 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் இன்று தபால் வாக்குகளை செலுத்தினர்.

அப்போது அங்கு தபால் வாக்கு செலுத்த வந்த சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சங்கரன் என்பவர் தவறாமல் மாஸ்க் அணியவும், தவறினால் ரூ.200 அபராதம் என பொறிக்கப்பட்டிருந்த பதாகை கழுத்தில் அணிந்தபடி வலம் வந்தார். அங்கு நீண்ட வரிசையில் தபால் வாக்கு செலுத்த காத்திருந்த அரசு அலுவலர்களை சமூக இடைவெளி விட்டு நிற்குமாறும் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தினார். அப்போது அங்கு முகக் கவசம் அணியாமல் தபால் வாக்கு செலுத்த வந்த அதிகாரி ஒருவரை கையை பிடித்து இழுத்து அவருக்கு ரூ.200 அபராதம் விதிக்குமாறு கூச்சலிட்டார்.

பின்னர் சங்கரன் தன் வைத்திருந்த முக கவசத்தை அவருக்கு வழங்கி கும்பகோணத்தில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது எனவே தயவுசெய்து முகக் கவசத்தை அணிந்து வெளியில் வருமாறு கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News