கும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கும்பகோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்;
பாண்டிசேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதபோக்கை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே கும்பகோணம் நகர செயலாளர் ஆகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் . தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அர்ஜுன், மாவட்டக்குழு உறுப்பினர் சந்துரு ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாநில துணை செயலாளர் அரவிந்த் சாமி நிறைவுரையாற்றினார். மகாலட்சுமி நன்றி கூறினார்.