கும்பகோணம் அருகே அன்னை கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு அன்னை கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் அன்வர் கபீர் தலைமையேற்று நடத்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் மாணிக்க வாசுகி முன்னிலை வகித்தார். வேலை வாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமூலன் வரவேற்றார். மேலும் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் இதுபோன்ற அரிய வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களுடைய அறிவுத்திறனையும், செயல் திறனையும் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் தாங்கள் பணியாற்றி இக்கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
இதில் கல்லூரி துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன், பேராசிரியர் ராஜா கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். இதில் சுமார் 15 த்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு வளாக நேர்காணல் நடத்தினார்கள்.
இதில் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்பட 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ் உயராய்வுத்துறை பேராசிரியர் முனைவர் கலையரசி நன்றி கூறினார்.