கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் இந்துமக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம்

Update: 2022-01-25 06:41 GMT

கும்பகோணத்தில் இந்து மக்கள் அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் இந்திய குடியரசு தினத்தில் கச்சத்தீவில் தேசியக்கொடியை ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பூசாரிகள் பேரவைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாநில முதன்மை பொதுச்செயலாளர் பாலா கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட 285.20 ஏக்கர் பரப்பளவு கொண்ட கச்சதீவை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் பிரதமர் இந்திராகாந்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு தாரை வார்த்தது. இதனால் இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் தற்போது மீன்பிடிக்கவும், மீன்பிடி வலைகளை உலர வைக்கவும், ஓய்வு எடுக்கவும், சர்ச்சில் வழிபாடு செய்யவும் முடியாமல் இலங்கை சிங்கள ராணுவம் பல்வேறு கட்டுப்பாடுகளை, தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து, படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். தங்கச்சி மடம் மீனவர்கள் படகில் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலை விட்டு மோதி விபத்து ஏற்படுத்தி 7 மீனவர்களை கடலில் தத்தளிக்க வைத்துள்ளனர்.

இதுபோல் இந்திய மீனவர்கள் மீது தினந்தோறும் அத்துமீறி தாக்குதல், படகுகள் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இலங்கை வசமுள்ள கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும், கச்சத்தீவில் வரும் 26ம்தேதி தேசியக்கொடியை ஏற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News