கும்பகோணத்தில் அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

கும்பகோணத்தில் அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-01-25 17:00 GMT

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட அமமுக மாணவர் அணி சார்பில் நடந்த வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட அமமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதை முன்னிட்டு மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு  துணை பொதுச் செயலாளரும் தஞ்சை வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான ரெங்கசாமி, தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் செல்லதம்பி, கழக பிரிவு நிர்வாகிகள் பிரகதீஸ்வரன், சரவணன், ஜெயகரன், நகர செயலாளர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், கார்த்திகேயன், ஜெகன்.

உதயகுமார், விஜயபாலன், பேரூர் கழக செயலாளர்கள் பிரேம்நாத், செந்தில், மாவட்ட பிரிவு செயலாளர்கள் பெருசு ராமமூர்த்தி, ஆனந்தி, சாமிநாதன், சுரேஷ்குமார், பிரகாஷ், லதா, நகர அவைத் தலைவர் ஜெயக்குமார், நகர கழகம் தர்மா, ஐயப்பன், நகர்ராஜா, ஆல்பா குமார், யூனியன் ராஜா, மாவட்ட அம்மா பேரவை காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News