கும்பகோணத்தில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
கும்பகோணத்தில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தமிழுக்காக போராடி தங்களின் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, காந்தி பூங்கா அருகே மாணவரணி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், நகரச் செயலாளர் ராம. ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், என்ஆர்விஎஸ். செந்தில் அசோக் குமார் முத்துகிருஷ்ணன் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் மாணவர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.