கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா 70 கிலோ பறிமுதல்

கும்பகோணத்தில் நடைபெற்ற சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா 70 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-10-08 08:30 GMT

பறிமுதல் செய்யப்படட குட்கா. 

தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ராவளிபிரியா உத்தரவின்பேரில்,  எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார், கும்பகோணம் கடைவீதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது,  அங்கிருந்த பெட்டிக் கடையில் சோதனை செய்தனர்.

இதில், கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் பதிக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து,  தனிப்படை போலீசார் கும்பகோணம் கிழக்கு போலீசார் உதவியுடன் குட்கா, பான்மசாலாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த தட்சிணாமூர்த்தி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 கிலோ குட்கா, பான் மசாலா, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News