திருப்புறம்பியம் சாட்சிநாதர் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா

திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடந்தது.;

Update: 2022-04-14 03:44 GMT
திருப்புறம்பியம் கோவிலில் இன்று அதிகாலை குருபெயர்ச்சியையொட்டி சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாதர் சுவாமி திருக்கோவில் ஆதித்தேச்சரம், சூரிய புஷ்கரணி என்று சொல்லக்கூடிய பிரம்ம தீர்த்த வளாகத்தில் சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கு இப்பெருமான் ஐந்தெழுத்தின் உட்கருத்தை விளக்கியதாகவும் இதனாலேயே அறம் உரைத்த நாயனார் என்று சிறப்பும் பெற்றது.

14ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன இராசிக்கு பிரவேசிப்பதால் இந்த குருபெயர்ச்சியை முன்னிட்டு மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயிலில் முன்புறமாக தனிக் கோயில் கொண்டுள்ள குரு பகவானுக்கு 13ம் தேதி இரவு 9.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை குருபகவானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் பால் அபிஷேகமும் மற்றும் லட்சார்ச்சனை ஆகியவை நடைபெற்றது.

Tags:    

Similar News