கும்பகோணம் தனியார் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;

Update: 2022-04-02 14:00 GMT
கும்பகோணம் தனியார் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் மழலையர் வகுப்புகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், மெட்ரிக் பள்ளி நிறுவனர் கார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் யு.கே.ஜி முடித்த 34 குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் படித்து பட்டம் வாங்க வேண்டும் என்பது இலக்கு. அதனை வளரும் வயதிலேயே மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Tags:    

Similar News