கும்பகோணத்தை மாநகராட்சியாக்கி அரசாணை வெளியீடு: திமுகவினர் கொண்டாட்டம்

கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் முன்னிலையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்;

Update: 2021-12-22 10:45 GMT

 கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே மாநகர செயலாளர் தமிழழகன் தலைமையில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தரம் உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி என அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனைக் கொண்டாடும் விதமாக கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே மாநகர செயலாளர் தமிழழகன் தலைமையில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், கணேசன், பாஸ்கர், மாநகர மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News