கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2022-01-08 16:52 GMT

கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் கே.ஒய்.பி மோட்டார்ஸ் சஸ்பென்சன்ஸ் அதிகாரிகள் முரளி, நித்தியகல்யாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நேர்முக தேர்வினை நடத்தினர். பின்பு 30 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி மாணவர்களை பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு அரசு இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முருகேசன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர் சுதாகர்  செய்திருந்தார்.

Tags:    

Similar News