50 பவுன் தங்க நகைகளுடன் கல்லுாரி மாணவி தலைமறைவு

கும்பகோணத்தில் வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகைகளுடன் கல்லுாரி மாணவி தலைமறைவானதால் பரபரப்பு.;

Update: 2021-07-15 10:16 GMT

மாதிரி படம் 

கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரில் வசிப்பவர் தனபால் மகன் அருணோதயம் (52). இவர் அதே பகுதியில் லாட்ஜ் வைத்துள்ளார். இவரது மகள் சிவரஞ்சனி (21). கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் 4ம் ஆண்டு சித்த மருத்துவம் படிக்கிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் கண் விழித்து பார்த்தபோது சிவரஞ்சனியை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்து பார்த்தும் அவரை பற்றிய விபரம் தெரியவில்லை.

மேலும், வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம், வங்கியில் பணம் எடுக்க பயன்படுத்தும் 5 ஏடிஎம் கார்டுகள், வங்கி பாஸ்புக் ஆகியவற்றையும் சிவரஞ்சனி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருணோதயம் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில் நாச்சியார்கோவில் பாரதி நகரில் வசிக்கும் மணிவண்ணன் மகன் திவாகரன் (22) சிவரஞ்சனியை அழைத்து சென்றுள்ளதாக முதல் கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Tags:    

Similar News