கும்பகோணத்தில் தமாகா தலைவர் வாசன் பிறந்தநாள் விழா
கும்பகோணத்தில் தமாகா தலைவர் வாசன் பிறந்தநாள் விழாவை, அக்கட்சியினர் கொண்டாடினர்.;
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் 57வது பிறந்தநாள் விழா, கும்பகோணம் தமாகா மாவட்ட தொழிற்சங்க அலுவலகத்தில் குடந்தை மாநகர தலைவர் சங்கர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மாநில தேர்தல் உயர்மட்டக்குழு உறுப்பினர் ராஜாங்கம் தையல் இயந்திரம், வேஷ்டி சட்டை, புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில செயலாளர் அசோக்குமார், மாநில நிர்வாகிகள் துரை, ஜெயபால், சுதர்சன், செல்வம், தெற்கு வட்டார தலைவர் செல்வராஜ், வடக்கு வட்டார தலைவர் நடுவக்கரை கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சந்திரசேகரன், மாநகர நிர்வாகிகள் மோகன், பன்னீர்செல்வம், ராமதாஸ், ராஜாராமன், கில்ட் ராஜா, மாநகர பொருளாளர் அரவிந்த பாபு, மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஸ்ரீராம், மெகமுன் அக்ரம், உதயகுமார், மார்ட்டின், ஆனந்தராஜ், நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ், நகர இளைஞரணி துணை தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.