கும்பகோணத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் பொது உறுப்பினர் கூட்டம்

அகவிலைப்படி உயர்த்திட வேண்டும், மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வகை படுத்திட வேண்டும்;

Update: 2021-12-19 17:00 GMT

கும்பகோணத்தில்  நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது ஆண்டு பொது உறுப்பினர் கூட்டம் 

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது ஆண்டு பொது உறுப்பினர் கூட்டம் தலைவர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருச்சி மண்டல செயலாளர் செகநாதன், துணைத் தலைவர் ஜீவானந்தம்,, இணைச் செயலாளர் மோகன், பொருளாளர் சுப்பிரமணியன், உதவி பொருளாளர் நடராஜன், மன்னார்குடி கிளை செயலாளர் பாண்டுரங்கன், தஞ்சாவூர் கிளைச் செயலாளர் ராஜன், துணைத் தலைவர் விஸ்வநாதன், பாபநாசம் செயலாளர் செல்வராஜ், உதவி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அகவிலைப்படி உயர்த்திட வேண்டும், மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வகை படுத்திட வேண்டும், குடும்பநல நிதி 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும், உயிர்ச் சான்று சமர்ப்பிக்க அரசு முறைப்படி நடைமுறைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News