கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்
கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்;
கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் கும்பகோணம் ஆதயா தோல் மற்றும் லேசர் கிளினிக் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமினை கல்லூரி முதல்வர் முருகேசன் முன்னிலையில் கல்லூரி துணை முதல்வர் சுதாகர் தொடங்கி வைத்தார்.
முகாமில் தோல் மருத்துவர் வித்யாபாரதி, மருத்துவர் ஆனந்த் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ சேவை வழங்கினர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம் முகாமிற்கான ஏற்பாட்டினை செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.