கும்பகோணத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
கும்பகோணத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மகளிர் லியோ சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மோகன்லால் மூல்சந்த் குடும்பத்தினர், மிட்டாலால் சலானி குடும்பத்தினர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை லயன்ஸ் சங்க தலைவர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் மதுசூதனன், நிர்வாக அலுவலர் ராமதுரை மற்றும் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டன. அவர்களை அறுவை சிகிச்சைக்காக மதுரை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.