சுவாமிமலையில் வணிகர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி
சுவாமிமலையில் வணிகர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி
சுவாமிமலையில் வணிகர் தினத்தை முன்னிட்டு சுவாமிமலை வணிகர் சங்கத்தின் சார்பில் தேரடி அருகே வணிகர் சங்க சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி வணிகர் சங்க தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
சங்க கொடியை தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் தங்க நடராஜன் ஏற்றி வைத்தார். பொருளாளர் செந்தில்குமார் வரவேற்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட துணைத்தலைவர் தங்க நடராஜனுக்கு சுவாமிமலை வர்த்தக சங்கத்தின் சார்பில் பல்வேறு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சங்க ஆலோசகர்கள் கல்யாணகுமார், கோபால், ஸ்டுடியோ மதி, சங்கத்தின் துணைத் தலைவர்கள் பக்ருதீன், புருஷோத்தமன், லோகநாதன், ராஜா, கண்ணன், செந்தில், சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சங்க உறுப்பினர் மணிவண்ணன் நன்றி கூறினார்.