கும்பகோணத்தில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்த 5 பேர் கைது

கும்பகோணத்தில் அனுமதியின்றி மதுபானங்களை விற்ற 5 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.;

Update: 2021-08-29 12:06 GMT

பைல் படம்.

கும்பகோணத்தில் அனுமதியின்றி மதுபானங்கள், டாஸ்மாக்  உள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணனுக்கு தகவல் சென்றது.

இதையடுத்து திருச்சி மத்திய மண்டல ஐஜி.,யின் உத்தரவின் பேரில், திருச்சி உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கும்பகோணத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையப் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்களை விற்ற கும்பகோணம் இந்திராகாந்தி சாலையைச் சேர்ந்த சாமிநாதன் (50), தாராசுரம் அனுசுயா நகரைச் சேர்ந்த மாரிமுத்து (35), வீரபாண்டி (53) ஆகிய மூவரிடமிருந்து 546 மதுபாட்டில்கள், ரூ.74,195 ரொக்கம், 2 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்துக்குட்பட்ட கும்பகோணம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஜாபர்அலி(49), கம்மாளத் தெரு ராமு(46) ஆகியோரிடமிருந்து 84 மதுபாட்டில்கள், ரூ.5,330 ரொக்கம் 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மதுபானங்களை கடத்திய ௬ பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News