சுவாமிமலை பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்

சுவாமிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2022-02-09 15:00 GMT

சுவாமிமலை பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் சுவாமிமலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா வெளியிட்டார். சுவாமிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-

1வது வார்டு ( திமுக ) கோவர்த்தன், (அதிமுக) எஸ் .சங்கர் என இருவர் மட்டும் போட்டியிடுகிறார்கள்.

2-வது வார்டு, ஜெகபர் அலி (தி.மு.க) சபீர் அலி (அதிமுக) சுயேட்சை இருவர் என 4 பேர்கள் போட்டியிடுகிறார்கள்.

3வது வார்டில் (திமுக) கலா, (அதிமுக) சத்தியவாணி, (பாட்டாளி மக்கள் கட்சி) பிரியா என மூன்று பேர் போட்டியிடுகிறார்கள்.

4 -வது வார்டில் (திமுக) மேரி, (அதிமுக) ரம்யா, (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) ரேவதி சுயேச்சைகள் இருவர் என ஐந்து பேர் போட்டியிடுகிறார்கள்.

5-வது வார்டில் (திமுக) சபானா, (அதிமுக) ராணி என இருவர் போட்டியிடுகிறார்கள்.

6வது வார்டில் (திமுக) குணசேகர், (அதிமுக) செல்வகுமார், (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) முனுசாமி என மூன்று பேர் போட்டியிடுகிறார்கள்.

7வது வார்டில் (திமுக) மதியழகன், (அதிமுக) சரவணன், (பாரதிய ஜனதா கட்சி) வெங்கட்ராமன், (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) பாஸ்கர் என நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.

8வது வார்டில் (திமுக) லட்சுமி பிரியா, (அதிமுக) பிரியா, (பாரதிய ஜனதா கட்சி) சுமித்ரா என மூன்று பேர் போட்டியிடுகிறார்கள்.

9வது வார்டில் (திமுக) வைஜெயந்தி, (அதிமுக) சார்பில் தீபா, (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) நாகேஸ்வரி, சுயட்சை ஒருவர் என நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.

10-வது வார்டில் (அதிமுக) அம்சவல்லி, (இந்திய தேசிய காங்கிரஸ்) இளவரசி, (பாட்டாளி மக்கள் கட்சி) புவனேஸ்வரி என மூன்று பேர் போட்டியிடுகிறார்கள்.

11வது வாட்டில் (திமுக) துர்காதேவி, (அதிமுக) திருமால், (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) தங்கவேல் என மூன்று பேர் போட்டியிடுகிறார்கள்.

12 வது வார்டில் (திமுக ) பாலதண்டாயுதபாணி, (அதிமுக) செந்தில் குமரன் என இரண்டு பேர் போட்டியிடுகிறார்கள்.

13 வது வார்டில் (திமுக) குணாளன், (அதிமுக ) கற்பகம், (பாரதிய ஜனதா கட்சி) கல்யாணி, (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) வீரமணி சுயட்சை ஒருவர் என 5 பேர் போட்டியிடுகிறார்கள்.

14வது வார்டு (திமுக) ராதிகா, (அதிமுக) ரமா, (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) புவனேஸ்வரி, சுயேட்சை ஒருவர் என நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.

15வது வார்டில் (திமுக) மும்தாஜ் பேகம், (அதிமுக) திவ்யா, (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) தீபா, சுயட்சை ஒருவர் என நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.

மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் மொத்தம் 51 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

Tags:    

Similar News