திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள்

திருநாகேஸ்வரம் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரம்;

Update: 2022-02-12 02:00 GMT

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியலை திருநாகேஸ்வரம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவலிங்கம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மங்கை ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.

திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு,

1-வது வார்டு

சுந்தரமூர்த்தி (தி.மு.க.) குமாரராஜா (அ.தி.மு.க.), ரவிச்சந்திரன் (பி.ஜே.பி.), முத்துக்குமார் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் 2பேர் என 6 பேர் போட்டியிடுகின்றனர்.

2-வது வார்டு

உதயா (தி.மு.க.) கலையரசி (அ.தி.மு.க.) ராஜகுமாரி (பி.ஜே.பி.), மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

3-வது வார்டு

முகமது இக்பால் (தி.மு.க.) சீனிவாசன் (அ.தி.மு.க.) மகேந்திரன் (தே.மு.தி.க.) கோபி (நாம் தமிழர்) சுயேட்சை 2 பேர் உட்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.

4-வது வார்டு

அபிராமி (தி.மு.க.), சர்மிளாபானு (அ.தி.மு.க.), ராசாத்தி (பா.ம.க.), செல்வகுமாரி (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சை 2 பேர் உட்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.

5-வது வார்டு

மாலா (தி.மு.க.) முத்துலட்சுமி (அ.தி.மு.க.) வேம்பு (பி.ஜே.பி), தனலட்சுமி (நாம் தமிழர்) ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

6-வது வார்டு

நாகலிங்கம் (தி.மு.க.), தீபா (அ.தி.மு.க.) சிவசங்கரநாதன் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சை 2 பேர் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்.

7-வது வார்டு

ஜோதி (தி.மு.க.), ராஜேந்திரன் (அ.தி.மு.க.), மோகன்தாஸ் (பி.ஜே.பி.), அசோகன் (நாம் தமிழர்) ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

8-வது வார்டு

கீதா (தி.மு.க.), புனிதா(அ. தி. மு. க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 3 பேர் போட்டியிடுகின்றனர்.

9-வது வார்டு

செந்தாமரை (தி.மு.க.), ஜான்சிராணி (அ.தி.மு.க.), செல்வரத்தினம் (தே.மு.தி..க.) மற்றும் சுயேச்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

10-வது வார்டு

மகேஸ்வரி (தி.மு.க.), சேதுராமன் (அ.தி.மு.க.), உப்பிலி (பி.ஜே.பி.) செந்தில்குமார் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்.

11-வது வார்டு

சட்டநாதன் (தி.மு.க.), காமராஜ்(அ.தி.மு.க.), ஷீலா (பி.ஜே.பி.), கணேசன்(நாம் தமிழர்), மற்றும் சுயேட்சை 4 பேர் உட்பட 8 பேர் போட்டியிடுகின்றனர்.

12-வது வார்டு

பரமேஸ்வரி (அ.தி.மு.க.), சூரியகலா (பி.ஜே.பி.), ரம்யா(நாம் தமிழர்) மற்றும் சுயேட்சை 6 பேர் உட்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.

13-வது வார்டு

சங்கீதா (தி.மு.க.), அலமேலு மங்கை (அ.தி.மு.க.), ராஜேஸ்வரி (பி.ஜே.பி.) ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

14-வது வார்டு

பாலச்சந்திரன் (தி.மு.க.), மாலா (அ.தி.மு.க.), மாடசாமி (நாம் தமிழர்) ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

15-வது வார்டு

மீனா (காங்கிரஸ்), சாந்தா (அ.தி.மு.க.), புவனேஸ்வரி (பா.ம.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 15 வார்டுகளிலும் 74 பேர் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News