பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விஜய ஆரோக்கியராஜ் தலைமை வகித்து உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரத போராட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்க வேண்டும், 5ஜி சேவையை துவங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஜூன் மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இனி வரும் வாரங்களில் மாதந்தோறும் கடைசி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும்,
மத்திய அரசு பிஎஸ்என்எல் ஆர்டிக் பைபர் மற்றும் டவர்களை பணமாக்க முயற்சிக்கக் கூடாது. காலியாக உள்ள நிலங்களை பணமாக்குவது மூலம் பிஎஸ்என்எல் கடன்களை திருப்பிச் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க்கை பலப்படுத்த வேண்டும், பவர் பிராண்டுகள், பேட்டரிகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன் ராமச்சந்திரன் பெற்ற முருகன் செந்தில் முருகன் மற்றும் பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.