கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது;
கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பன்னாட்டு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையானது சூரியனுக்கும் பிற உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக வருடம் தோறும் கொண்டாடப்படுகிறது. உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பள்ளியில் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தியும், பொங்கல் வைத்தும், நாட்டுப்புற கலைகளான கும்மி, பறை, தப்பு போன்ற தமிழர் கலைகளை போற்றும் வகையில் பாடல்களுக்கு மாணவ மாணவிகள் நடனமாடி கொண்டாடினார். இது போன்ற விழாக்கள் கொண்டாடப்படுவதன் மூலம் வளரும் தலைமுறையினரான மாணவ-மாணவிகள் தமிழனின் பண்பாட்டினையும் மரபினையும் உணர்ந்து கொள்வதோடு மட்டுமின்றி, சமத்துவத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் மாணவ மாணவியர்களுக்கு தமிழர் பண்பாட்டின் சிறப்பை பற்றி எடுத்து உரைத்தார். பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் அம்பிகாபதி வரவேற்றார்.