திருவிடைமருதூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவிடைமருதூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திருவிடைமருதூர் அருகே கல்யாணபுரத்தில் உள்ள கல்லணை-பூம்புகார் சாலையின் வலதுபுறம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அகலப்படுத்தும் பணியின்போது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், உதவி கோட்ட பொறியாளர் பிலிப் பிரபாகரன், இளநிலை பொறியாளர் கந்தன் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.