கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.;

Update: 2021-12-30 10:30 GMT

ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் டெம்பிள் சிட்டி மற்றும் கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் இணைந்து  மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தியது.

ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் டெம்பிள் சிட்டி மற்றும் கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் இணைந்து கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியை கடந்த 5 நாட்களாக வழங்கி வருகிறது.

இப்பயிற்சியின் சிறப்பம்சமாக இன்று சுமார் 40 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர் விஜயராகவன் வடிவமைத்த AEC LMS என்ற மென்பொருள் செயலி மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. விழாவிற்கு நயின் ஏகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

இவ்விழாவில் ரோட்டரி சங்க தலைவர் செந்தில், ரோட்டரி சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி தலைவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் செய்திருந்தார்.

Tags:    

Similar News