கும்பகோணம் மாநகராட்சி தேர்தல்: சணல் பை தயாரிப்பு பணி தீவிரம்
கும்பகோணம் மாநகராட்சி தேர்தல் வாக்கு சாவடிக்கு எடுத்துச் செல்லும் சணல் பை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
கும்பகோணம் மாநகராட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாற்பத்தி எட்டு வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச்செல்லும் பொருட்களை பிளாஸ்டிக் அல்லாத சணல் பையில் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு சனல் பையிலும் விபரங்களை எழுதும் பணி தொடங்கி தேர்தல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை கையால் வரையும் கலைஞர்களைக் கொண்டு எழுதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.