மக்கள் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் தொட்டி; எம்எல்ஏ திறப்பு
கும்பகோணத்தில் குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு;
கும்பகோணத்தில் குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு.
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சி சந்தனாள்புரம் அன்பு நகரில் ரூபாய் 3 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக மினி வாட்டர் டேங்க் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்வில், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன், கும்பகோணம் பெருநகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன், மாவட்ட பிரதிநிதி டி.என்.கரிகாலன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் அபிராமிசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்திமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுதாஅம்பிகாபதி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.