ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கல்
ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்களை நிர்வாகிகள் வழங்கினர்;
கும்பகோணம் அருகே ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சுமார் 70 ஆயிரம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குடந்தை மகாசக்தி தலைவர் லயன் செல்வமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனா செல்வம் கலந்துகொண்டார். ஆடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மகாலிங்கம், சரவணன், மண்டல தலைவர் சதீஷ், வட்டார தலைவர் கலைச்செல்வி, ஆடுதுறை லயன்ஸ் சங்க சாசன தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க செயலாளர் ரஜினிபாய், சங்க பொருளாளர் ஆர்த்தி மற்றும் ஆடுதுறை சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். லயன்ஸ் சங்க வழிகாட்டி செல்வம் நன்றி கூறினார்.