கும்பகோணத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய திமுகவினர்
கும்பகோணத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது;
கும்பகோணத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய திமுக நிர்வாகிகள்
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கும்பகோணம் அண்ணா அரண்மனையில் நடைபெற்ற நிகழ்வில், மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு, தஞ்சை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் கல்யாணசுந்தரம், மாநில மாணவர் அணி இணைச்செயலாளரும் அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில், மாவட்ட மாணவர்அணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு, குடந்தை மாநகர செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அண்ணாதுரை, பாஸ்கர், மாநகர கழக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநகர பொருளாளர் சோடா கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா, மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் தெட்சிணாமூர்த்தி, பார்த்திபன், அனந்தராமன், முருகன்.
வழக்கறிஞர் விஜயகுமார், கணேசன், சுமதி, மகளிர் அணி சுபா திருநாவுக்கரசு, சுமதி, பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், சாகுல் ஹமீது, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் கௌதம், பிரகாஷ், விஜயகுமார், நகர ஒன்றிய அமைப்பாளர்கள் விக்னேஷ், ஸ்டாலின், மணிவர்மன், சுரேஷ், முகேஷ், தேவராஜன், சுதாகர், கார்த்தி, அசோக், ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.