திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நிதிக்குழு மானிய நிதியில் அமைய உள்ள அசோக் நகர் பூங்கா, வளம் மீட்பு பூங்கா திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார்;
திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 15வது நிதிக்குழு மானிய நிதியில் அமைய உள்ள அசோக் நகர் பூங்கா, வளம் மீட்பு பூங்கா திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் மெகா தடுப்பூசி முகாம் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், செயல் அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.