உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றிய காவலருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்றிய பெண் காவலருக்கு தஞ்சை சரக டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்து வெகுமதி வழங்கினார்.;
காவல் நிலையத்தில் நோயாளியை காப்பாற்றிய பெண் போலீசுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி காவல் நிலைய பெண் காவலா் துா்காதேவி. இவா் காவல் நிலையத்தில் டிசம்பா் 3 ஆம் தேதி இருந்தபோது, பாஸ்போா்ட் சரிபாா்ப்பு தொடா்பான விசாரணைக்கு திருநாகேசுவரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் வந்தாா். அப்போது, விஜயகுமாருக்கு சா்க்கரை நோயால் படபடப்பும், உடல் நலக்குறைவும் ஏற்பட்டது.
இவரை பெண் காவலா் துா்காதேவி தேவையான முதலுதவிகளைச் செய்து நல்ல நிலையில் வீட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தாா். இவரது செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும், காவல் துறைக்கு நற்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.) பிரவேஷ்குமாா் துா்காதேவியை அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினாா்.