கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;

Update: 2021-11-15 09:30 GMT

பைல் படம்

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக வாழ்வியல் பேச்சாளர் சொற்பொழிவாளர் ராமன், கும்பகோணம் தொகுதி சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் தொகுதி சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் டெங்கு கொசு போல் வேடம் அணிந்து மாணவர்களுக்கு கொசுவினால் பரவும் நோய்கள் பற்றியும் எவ்வாறு சுகாதார முறையினைப் பின்பற்ற வேண்டும் எனவும் விழிப்புணர்வு பாடல் பாடி நடனம் ஆடி எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News