விவேகானந்தர் ஜெயந்தி அன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் விவேகானந்தர் ஜெயந்தி அன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
கும்பகோணத்தில் அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் பாலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் ஜெயந்தி நடைபெறுகிறது. அன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும், கும்பகோணத்தில் விவேகானந்தருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்களுக்கு விவேகானந்தர் உருவ வேடமணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா வாயிலாக தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.