பயிர் காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் இழப்பீட்டு தொகையை வட்டியுடன் வழங்கக் கோரி கும்பகோணத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்;
பயிர் காப்பீட்டுத் திட்டம் இழப்பீட்டு தொகையை வட்டியுடன் வழங்கக் கோரி கும்பகோணத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், வருமான வரித்துறை அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்ட, 2017-2018 ஆண்டு முதல் வழங்கவேண்டிய பயிர் மகசூல் இழப்பு தொகையான சுமார் ரூ.1200 கோடியை காலதாமதத்திற்கு வட்டியுடன் விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு முழக்கம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பலவாறு பாசன ஆதாரம் சங்க தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். குடந்தை வட்டத் தலைவர் ஆதி கலியபெருமாள் நிர்வாகி வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சின்னதுரை கண்டன முழக்கம் எழுப்பினர்.செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் நன்றி உரையாற்றினார்.