கும்பகோணத்தில் கொரோனா விதி மீறல்; ஏழு கடைகளுக்கு அபராதம்
கும்பகோணத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத ஏழு கடைகளுக்கு அபராதம் விதித்து கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கும்பகோணம் கோட்டாட்சியர் சுகந்தி கும்பகோணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார். அப்பொழுது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க தவறிய ஒரு ஜவுளி நிறுவனம், நகைக்கடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கடைகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர் சுகந்தி அதில் ஏழு கடைகளுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மேலும், கும்பகோணத்தில் உள்ள முக்கிய பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் நிர்வாகிகளிடம் விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்த ஆய்வில், வருவாய் அதிகாரி சசிகுமார், சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கர ராஜ்,, சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.