கும்பகோணத்தில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி

கும்பகோணம் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவியை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்;

Update: 2021-06-20 07:22 GMT

கும்பகோணம் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவியை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள 205 திருக்கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றிவரும் 287  அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியாக நபர் ஒருவருக்கு ரூ. 4000, 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள்  வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது.

அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, துறை செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News