கொரோனா ஊரடங்கு: கும்பகோணத்தில் வெறிச்சோடிய சாலைகள்
அவசியம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக தமிழகத்தில் பரவி வருவதால் தமிழக அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல்துறையினர் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் வெளியே சுற்றி வரும் பொதுமக்களுக்கு வைரஸ் தொற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்தும் வீடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.அதேபோல் வாகனத்தில் சுற்றி வரும் பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை கொரோனோ ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அவசியம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.