வலையப்பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா குறித்த ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் அருகே வலையப்பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2022-01-08 15:30 GMT

வலைய பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் வலையப்பேட்டை ஊராட்சியில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமரா வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் வலையப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கும்பகோணம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் முன்னிலை வகித்தார்.

கும்பகோணம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அசோகன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமரா வைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பிரகாஷ் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், சிங்காரம், கேசவமூர்த்தி, ராஜேந்திரன், கிராம நாட்டாமைகள் சந்திரசேகர், கலைமணி, கல்யாணசுந்தரம், சண்முகம், பாஸ்கர், குமார், பன்னீர்செல்வம், வலையப்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் கேசவன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News