கும்பகோணத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் விவசாய விரோத வேளாண் சட்டங்களை கன்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கும்பகோணம் காய்கறி மார்க்கட் அருகில் ஆர்ப்பாட்டமும், துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதில், மார்க்சிஸ்ட் கட்சி நகரசெயலாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.